இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் : இலங்கை கடற்படையின் அதிரடி நடவடிக்கை!!

113

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக 09 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறி, இலங்கை கடற்படையினர் இன்று(03.1.2026) குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் வாசஸ்தலத்தில் இன்று முற்படுத்திய போது, எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக 02 நாட்டு படகுடன் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த 09 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை, 02 நாட்டு படகுகளையும் கடற்றொழிலாளர்களையும் விசாரணைகளின் பின்னர் நீரியல்வள துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.