ஈழத்தமிழர்கள் பெருமை; பிரான்ஸில் துணை மேயரானார் யாழ்ப்பாண தமிழ் பெண்!

185

பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக் கொண்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆதித்யா ஆனந்தராசா திங்கட்கிழமை (23) துணை மேயராக அதிகாரபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். இந்த நியமனம் வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த ஆதித்யா ஆனந்தராசா, இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்டு 19 வயதில் நகர மன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து பொதுச் சேவையில் ஈடுபட்டு மக்களுடன் நெருக்கமாக செயல்பட்டதன் மூலம், 25 வயதில் துணை மேயர் பதவியை அடைந்துள்ளார்.

அவரது இந்த முன்னேற்றம் இளம் தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாகக் கருதப்படுகின்றது. எதிர்காலத்தில் பல்துறை சமூகங்களுடன் இணைந்து செயல்பட்டு உள்ளூர் நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.