சட்டவிரோத டீசல் கையிருப்பு: 1,820 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது.!

199

கந்தளாய் – சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக டீசலை பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் திங்கட்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையின் போது அனுமதிப்பத்திரமின்றி விற்பனைக்காக கையிருப்பில் வைத்திருந்த 1,820 லீற்றர் டீசல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சேருநுவர பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டவிரோத எரிபொருள் கையிருப்பு மற்றும் விற்பனைக்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.