துருக்கியில் துயரம்: யாழ். குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் பலி!

228

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற துயரமான கார் விபத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள்:

நவாலி பகுதியைச் சேர்ந்த திருமதி ஜெயநந்தினி கணேசலிங்கம் (60)

அவரது மகன் கணேசலிங்கம் விபூசன் (28)

ஏழாலை பகுதியைச் சேர்ந்த திருமதி சிவாஸ்கரன் சுகந்தி (47)

இவர்கள் மூவரும் புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த நிலையில், சுற்றுலா பயணமாக துருக்கி சென்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திடீர் விபத்து, அவர்களது குடும்பத்தினரையும், யாழ்ப்பாண சமூகத்தையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை துருக்கி அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.