புத்தாண்டுக்கு முன் A/L பெறுபேறுகள்: O/L பெறுபேறுகளும் விரைவில்!

151

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கான அத்தியாவசிய நடவடிக்கைகள் தற்போது இறுதி நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கல்விப் பொதுத் தராதர சாதாரணதர (O/L) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், சாதாரணதர பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

செய்முறைப் பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் O/L பெறுபேறுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் வாய்ப்பு உள்ளது.