நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகள்: 14 வயது சிறுவன் உட்பட நால்வர் பலி.!

94

நாட்டின் பல பகுதிகளில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற வாகன விபத்துகளில் 14 வயதுடைய சிறுவன் ஒருவரை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிலியந்தலை, அதுருகிரிய, அலவத்துகொட மற்றும் வெள்ளம்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

பிலியந்தலையில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி மீண்டும் வீதிக்குள் நுழையும்போது பாதசாரி பெண்ணை மோதியதில் 47 வயதுடைய பெண் உயிரிழந்தார். அதுருகிரிய பகுதியில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் 14 வயது சிறுவன் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்தார்.

அலவத்துகொட பகுதியில் லொறி ஒன்று பின்னோக்கி நகர்ந்து பல வாகனங்களுடன் மோதியதில் 61 வயது முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்தார். மேலும், வெள்ளம்பிட்டிய பகுதியில் பேருந்து மோதியதில் 66 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவங்களுடன் தொடர்புடைய சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. தொடர்ந்து அதிகரித்து வரும் வாகன விபத்துகள் குறித்து பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது அவசியம் என எதிர்பார்க்கப்படுகிறது.