மொரகஹஹேனில் சட்டவிரோத மதுபான உற்பத்தி மையம் சுற்றிவளைப்பு: 2,220 லீற்றர் கோடா பறிமுதல்

94

மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹால்பிட்டிய பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (16) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த மையம் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சோதனையின் போது, சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட 2,220 லீற்றர் கோடா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் பெரிய அளவிலான சட்டவிரோத உற்பத்தி செயற்பாடு தடையிடப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மொரகஹஹேன – வெல்மில்ல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.