அரச ஊழியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு புதன்கிழமைகள் விடுமுறை!

114

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அறிவிப்பின்படி, எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அரச ஊழியர்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து, அனைத்து அரசு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் இவ்விதமாகவே விடுமுறை வழங்கப்படும். தனியார் நிறுவனங்களும் இதனை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முடிவு நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோக பிரச்சினைகள் காரணமாக எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.