ஹெரோயின், ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது.!!

180

கொட்டதெனியாவ மற்றும் அஹுங்கல பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனைகளின் போது ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ ரக போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டதெனியாவ – ஹப்புவலான பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 225 கிராம் ஹெரோயின் மற்றும் 165 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருட்களுடன் 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் ஹப்புவலான பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அஹுங்கல – கமகரணவத்த பகுதியில் நடத்தப்பட்ட மற்றுமொரு சோதனையின் போது 261 கிராம் 620 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.