சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி 68 வயது முதியவர் உயிரிழப்பு.!!

137

ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரணை கந்தன அமுனு எலபீல்ல பகுதியில் உள்ள வயல் நிலமொன்றில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஹொரணை கந்தன பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார். அவர் வயல் நிலப் பகுதியில் சென்றபோது அங்கு பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துமீறி நுழைவதைத் தடுப்பதற்காக அல்லது விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்சாரக் கம்பியிலேயே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.