திக்வெல்ல ஹிரிகெட்டிய கடலில் அலைக்குள் சிக்கிய இளைஞன் பாதுகாப்பாக மீட்பு.!!

175

திக்வெல்ல – ஹிரிகெட்டிய கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அலைகளில் சிக்கியிருந்த அந்த இளைஞனை கடற்கரையில் பணியில் இருந்த திக்வெல்ல பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர்கள் விரைந்து செயல்பட்டு மீட்டுள்ளனர். பின்னர் அவருக்கு உடனடி முதலுதவியும் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்டவர் திக்வெல்ல – வெவுருகன்னல பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை நிலைத்துள்ளதாகவும், கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் கடலில் நீராடும்போது பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.