எரிபொருள் வினியோகத்தில் புதிய நடைமுறை – QR முறையுடன் வாராந்த ஒதுக்கீடு அறிவிப்பு!

114

அதிரடி அறிவிப்பு: இன்று முதல் மீண்டும் QR முறை – QR இல்லாமல் எரிபொருள் கிடையாது!

இலங்கை வாகன சாரதிகள் கவனத்திற்கு! நாட்டில் எரிபொருள் விநியோக முறையில் மீண்டும் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலையும் உலகளாவிய எரிபொருள் இறக்குமதி சவால்களையும் கருத்தில் கொண்டு, எரிசக்தி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (மார்ச் 15) ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் National Fuel Pass (QR) முறைமை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

QR குறியீடு இல்லாமல் எந்த எரிபொருள் நிலையத்திலும் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வாராந்த ஒதுக்கீடு (Weekly Quota)

மோட்டார் சைக்கிள் – 5 லீற்றர்

திரிச்சக்கர வண்டி – 15 லீற்றர்

கார் – 15 லீற்றர்

வான் – 40 லீற்றர்

லொறி – 200 லீற்றர்

ஒதுக்கீடு புதுப்பித்தல்

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்கு வாகனங்களுக்கு வழங்கப்படும் வாராந்திர எரிபொருள் ஒதுக்கீடு தானாகவே புதுப்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.