பெருமளவிலான போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றல்; 10 சந்தேகநபர்கள் கைது.!!

182

இலங்கை கடற்படையினரால் ஆழ்கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, [12–13 மார்ச் 2026] காலகட்டத்தில், பெருமளவிலான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு மீன்பிடி படகுகள், தலா ஐந்து சந்தேகநபர்களுடன் பயணித்தவை, திக்-ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

சோதனையின் போது, குறித்த படகுகளிலிருந்து 176.568 கிலோ ஹெரோயின், 478.326 கிலோ ஐஸ், 8 வெளிநாட்டு தயாரிப்பு கைத்துப்பாக்கிகள், 2 ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 1 ஆ-16 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டன. கைதானவர்கள் 22 முதல் 49 வயது வரையிலானவர்கள், இரணவில, மஹவெவ, மெல்சிறிபுர, வென்னப்புவ, நீர்கொழும்பு, நாகுலுகமுவ, தங்காலை, பனபோல்பிட்டிய மற்றும் கந்துர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் B அறிக்கையை சமர்ப்பித்து, கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.