தனிப்படட விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள்.

155

இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலுக்குள்ளான கப்பலிலிருந்து உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் [13 மார்ச் 2026] வெள்ளிக்கிழமை ஈரானுக்கு அனுப்பப்பட்டன. மத்தள விமான நிலையத்திலிருந்து பிரத்தியேக விமானம் மூலம் இந்த சடலங்கள் ஏற்றப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார்.

ஈரான் கடற்படைக்கு சொந்தமான ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா கப்பல் கடந்த 4ஆம் திகதி இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. இதற்கு இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு, 32 ஈரானிய வீரர்கள் காயமின்றி மீட்கப்பட்டு காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள 84 சடலங்கள் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு ஒப்படைக்கப்பட்டன.

கடந்த வாரம் காலி பிரதான நீதவான் கராப்பிட்டிய வைத்தியசாலையின் உத்தரவின்படி சடலங்கள் ஈரான் தூதரக அதிகாரிகளுக்கு ஒப்படைக்கப்பட்டு, நேற்றைய தினம் (13 மார்ச் 2026) காலை 45 உடல்கள் மற்றும் பிற்பகல் மீதமுள்ள 39 உடல்களும் பிரத்தியேக விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பப்பட்டன. இந்த நடவடிக்கை ஈரான் மற்றும் இலங்கை இடையேயான ஒத்துழைப்பு மூலம் முறையாக முன்னெடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.