செட்டிகுளம் மகா வித்தியாலய அபிவிருத்தி – பிரதியமைச்சர் உறுதி

116

வவு.செட்டிகுளம் மகா வித்தியாலய அபிவிருத்திக்காக உயர் கல்வி பிரதியமைச்சர் நேரடி ஆய்வு.

வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தின் அபிவிருத்தி தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் அவர்களின் அழைப்பின் பேரில் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்திய கலாநிதி மதுர செனவிரத்ன  அவர்கள் கள விஜயம்மொன்றை 11.03.2026 (நேற்று) மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் பாடசாலை சமுகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டதுடன், பாடசாலை மைதானம், நூலகம் மற்றும் கட்டிடங்களும் பார்வையிடப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், பாடசாலை ஆளணிப் பற்றாக்குறை கல்வி முன்னேற்றம் மற்றும் தேவைகள் தொடர்பான விபரங்களை முன்வைத்தனர்.

பாடசாலை மைதான அபிவிருத்தி, சிற்றுண்டிச்சாலை வசதி, புதிய கட்டடங்கள் மற்றும் மாணவர்களின் போக்குவரத்து பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இவ்வனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் உறுதியளித்தார்.

மேலும் பிரதி அமைச்சர் கருத்துத்தெரிவிக்கையில் யுத்தகாலத்தில் செட்டிகுளம் வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றிய காலம் தொட்டு இப்பிரதேசத்தோடு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் இப்பகுதி மக்களின் தேவைகளை நன்கு அறிந்துள்ளேன் எனவும் தெரிவித்தார். எதிர்காலத்தில் பாடசாலையின் தேவைகளை பூர்த்தி செய்ய அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.