கள்ளச்சாராய கும்பலுக்கு கடும் அடி – சித்தாண்டியில் 4 பேர் கைது!

212

மட்டு சித்தாண்டி பகுதியில் சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், மக்கள் பிரதிநிதிகள், பொலிஸார் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செங்கலடி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சந்திவெளி பொலிஸார் மற்றும் சித்தாண்டி சமூக செயற்பாட்டு இளைஞர்கள் இணைந்து இன்று சித்தாண்டி–1 மற்றும் மாவடிவேம்பு பகுதிகளில் திடீர் சோதனைகளை முன்னெடுத்தனர்.

இந்த நடவடிக்கையின் போது வீதியில் சாராயம் வாங்கிச் சென்ற ஒரு வாடிக்கையாளர் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் உரிமையாளர் விற்பனை மற்றும் கடத்தலுக்கு பாதுகாப்பாக இருந்ததாகக் கூறப்படும் இரு நபர்கள் என மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சட்டவிரோத வடிசாராயப் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் சித்தாண்டி, மாவடிவேம்பு, ஈரளக்குளம், கூலாவாடி மற்றும் பெரியவட்டவான் ஆகிய பகுதிகளில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“சட்டவிரோத கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழியும் வரை இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படாது” என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.