மூன்று பிள்ளைகளின் தாய் ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு; போலீசார் மேலதிக விசாரணை.!!

96

அக்கரப்பத்தனை, ஆக்ரா தோட்டப் பகுதியிலுள்ள, ஆக்ரா ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 85 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆற்றில் சடலமொன்று மிதந்து வருவதை அப் பகுதியிலிருந்த விவசாயிகள் கண்டு அக்கரைப்பத்தனை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சடலத்தை பொலிஸார் மீட்டதோடு, மரண விசாரணைகளின் பின்னர் நுவரெலியாக மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக சடலம் கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.