யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பற்றிய தீ.!!

109

யாழ். உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றியதால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்றையதினம்(07.03.2026) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,

எரிபொருள் தாங்கியானது இன்றையதினம் உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எரிபொருள் கிடங்கிற்கு எரிபொருளை நிரப்பி முயற்சித்தது.

இதன்போது தீடீரென விபத்து ஏற்பட்டது. குறித்த தீ விபத்தில் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரம் முழுமையாக சேதமடைந்ததாக தெரியவருகிறது.

இது குறித்து கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.