யாழில் இறைச்சிக்காக மாட்டை கொண்டு சென்ற இருவர் கைது.!!

172

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இரவு மாட்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதி பத்திரமன்றி இறைச்சிக்காக சட்டவிரோதமாக மாட்டை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற இருவரை வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து மருதங்கேணி பொலிசார் கைது செய்தனர்.

மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவே இவ்வாறு இறைச்சிக்காக மாட்டை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற வேளை கைது செய்தனர்.