ஈரானின் ரகசிய அணு ஆயுத மையம் மீது தாக்குதல்: இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியிட்ட தகவல்.!!

175

ஈரானின் ரகசிய அணுசக்தி மையமான மின்-சடாஇ(Min-Zada’i) மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் ரகசிய அணுசக்தி திறன் மேம்பாட்டு மையமான மின்-சடாஇ(Min-Zada’i) மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

கடந்த 4 நாட்களாக தெஹ்ரானின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஈரானின் அணு ஆயுத திறன்களை பலப்படுத்த பயன்படுத்தப்பட்ட வந்த ரகசிய அணுசக்தி மையமான மின்-சடாஇ(Min-Zada’i) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு திறன்களை சிதைப்பதே இந்த தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தல்களை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதி இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை தடுக்க முயற்சி செய்தது, இருப்பினும் அணு ஆயுதத் திட்டத்தை ஈரான் கைவிடவில்லை என்று இஸ்ரேலிய பாதுகாப்பு படை(IDF) சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இத்தகைய ரகசிய மையங்களை குறிவைத்து அழிப்பதன் மூலம், ஈரான் நீண்ட கால தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்கவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.