தமிழர் பிரதேசத்தில் பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு; 46 வயதானவரின் லீலை

120

அக்கரைப்பற்று யுவதி ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய திருமணம் முடிக்காத நபர் ஒருவர் நீண்டகாலமாகத் தொடர்ச்சியாகப் பாலியல் தொந்தரவுகளை வழங்கி வந்துள்ளார்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட யுவதி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், நேற்று (27) சந்தேகநபரை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, அவர் அந்தப் பகுதியில் உள்ள பல பெண்களுக்கு நீண்டகாலமாக இவ்வாறு பாலியல் தொந்தரவுகளைக் கொடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.