இன்று மாலை 2 மணிக்கு பின் இடியுடன் கூடிய மழை!

102

மேல் மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அதேபோல், நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், மத்திய, சப்ரகமுவா, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.