தங்கம் இனி எட்டாக்கனிதான்! உலக சந்தை மாற்றத்தால் இலங்கையில் புதிய உச்சம்.

48

இலங்கையிலும் உலக சந்தையிலும் தங்கத்தின் விலையானது பெரும் ஏற்ற இறக்கங்களை அண்மைய நாட்களாக சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் இன்றைய தினம் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 4 இலட்சம் ரூபாவாக பதவாகியுள்ளது.

அத்துன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 370,000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை உலக சந்தை தகவல்களின் படி இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 5180 முதல் 5190 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறான சூழலில் தங்கத்தின் விலை நிலவரம் தொடர்பில் பிரபல இந்தியப் பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், தங்கம் 1000 டொலரில் இருந்து 5000 டொலராக உயர சுமார் 6 முதல் 7 ஆண்டுகள் ஆனது.

அதேபோல் மீண்டும் 4 மடங்கு உயர்ந்தால் 2035இற்கு அருகில் ஒரு அவுன்ஸ் 25000 டொலர்கள் ஆகலாம். அப்படியென்றால் ஒரு கிராம் சுமார் 800 டொலர்.

மேலும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவையும் கணக்கில் எடுத்தால் அடுத்த 10 – 12 ஆண்டுகளில் ஒரு கிராம் தங்கம் இந்திய ரூபா மதிப்பில் ஒரு இலட்சத்தை அடைய வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார்.