தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! மக்கள் பீதி.

53

தாய்வானின் வடகிழக்கு மாவட்டமான யிலான் கடற்கரையில் இன்று(24.02.2026) 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தாய்வான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் கட்டிடங்கள் சிறிது நேரம் அதிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 66.8 கி.மீ (41.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு தெற்கு தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அதே நேரத்தில் 1999 ஆம் ஆண்டு 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.