யாழில் கேரள கஞ்சாவுடன் சிக்கிய நபர்.!!

71

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் வடக்கு பகுதியில் இன்று(23) கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நெல்லியடி விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை நாகர்கோவில் வடக்கு பகுதியில் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது 1Kg 750 கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கேரள கஞ்சாவுடன் மருதங்கேணி பொலிசாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் குறித்த நபரை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் பொலிசார் முற்படுத்தவுள்ளனர்.