இலங்கையில் திடீரென 6,000 ரூபாவினால் உயர்ந்த தங்கத்தின் விலை!

132

இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று (22) சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று (21) காலை கொழும்பில் உள்ள செட்டியார் வீதி தங்கச்சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.366,300 ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில் தங்கத்தின் விலை சுமார் ரூ.6,000 ரூபாவினால் இன்று அதிகரித்துள்ளதாக சமீபத்திய சந்தை தரவு தெரிவிக்கிறது. அதன்படி, இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை, 24 கரட் 1 கிராம் ரூ. 50,800 ஆகவும், ஒரு பவுண் தங்கம் ரூ. 406,400 ஆகவும் உள்ளது.

22 கரட் 1 கிராம் தங்கம் ரூ. 46,560 ஆகவும், ஒரு பவுண் தங்கம் ரூ. 372,480 ரூபாவாகவும் உள்ளது. 21 கரட் 1 கிராம் தங்கம் ரூ. 44,460 ஆகவும், ஒரு பவுண் தங்கம் ரூ. 355,680 ஆகவும் உள்ளது.