மீண்டும் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை!

99

தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக பதிவாகி வரும் நிலையில் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,106 டொலராக பதிவாகியுள்ளது.

உலக சந்தையில் நேற்றைய தினம் (20.02.2026) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,010 டொலராக பதிவாகியிருந்தது.

அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலையும் அதிகரித்து, 84.59 டொலர்களாக பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், இந்த நிலையில் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 396000 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 366300 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.