இதயத்தை இரும்பு போல மாற்ற வேண்டுமா? இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் 3 பழங்கள்!

188

இதயத்தின் பகுதிகளுக்குக் இரத்த ஓட்டம் தடைப்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. மாறிவரும் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் போதிய உடற்பயிற்சி இல்லாத காரணத்தினால் தற்போது இளைஞர்களுக்கும் மாரடைப்பு வருகின்றன.அந்தவகையில், மாரடைப்பு வராமல் இருக்க சாப்பிடவேண்டிய 3 பழங்கள் குறித்து பார்க்கலாம்.

ஆப்பிள்
ஆப்பிளில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து குளுக்கோஸ் உடலில் மெதுவாக உறிஞ்ச உதவுகிறது. அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நல்லது.மேலும் இதில் க்யூயர்சிடின் என்ற பொருள் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) இதயத்தில் சேராமல் தடுக்கிறது.

ஆரஞ்சு
ஆரஞ்சில் வைட்டமின் C அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.மேலும் ஹிஸ்பெரிடின் என்ற சேர்மம் இரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

மாதுளை
மாதுளையில் பியூனிக்காலஜின் என்ற சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது இரத்தக் குழாய்களில் கொழுப்பு அடைப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.மேலும், மாதுளை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.