மூவர் தாக்குதல். காணி சண்டையில் ஒருவர் பலி!

122

காணி தகராறு கொலையாக முடிந்தது: யாழ்ப்பாணம் கோப்பாயில் பதற்றம்!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் காணி பிரச்சினை காரணமாக ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) கோப்பாய் கல்வியல் கல்லூரி அருகில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (59) என்பவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் மற்றொருவருக்கும் இடையில் நீண்ட காலமாக காணி தொடர்பான தகராறு நிலவி வந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இன்று ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைக்கலப்பாக மாறியதாகவும், அந்தச் சூழலில் மூவர் இணைந்து மேற்கொண்ட தாக்குதலால் அவர் கடுமையாக காயமடைந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இச்நசம்பவம் கோப்பாய் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், காணி தொடர்பான நீண்டகால தகராறுகள் உயிரிழப்பாக மாறுவது குறித்து பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.