T20 உலகக் கோப்பை: வென்றது இலங்கை. வெளியேறுகிறதா ஆவுஸ்திரேலியா?

150

T20 உலகக் கோப்பை லீக் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

Screenshot

இலங்கை அணியின் தலைவர் Dasun Shanaka டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அணியில் ஒரு மாற்றமாக கமில் மிஷாராவுக்கு பதிலாக குசல் ஜனித் பெரேரா சேர்க்கப்பட்டார் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஜோடியாக களமிறங்கிய Mitchell Marsh மற்றும் Travis Head ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடினர். முதல் 6 ஓவர்களில் 70 ரன்கள் சேர்த்த அவர்கள், இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் ஏற்படுத்தினர்.

6வது ஓவரில் மகேஷ் தீக்ஷனாவுக்கு எதிராக மார்ஷ் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகள் அடித்தார். ஹெட் 27 பந்துகளில் அரைசதமும், மார்ஷ் 22 பந்துகளில் அரைசதமும் பதிவு செய்தனர்.

இதற்கிடையில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் Matheesha Pathirana காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறியதால் அணிக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டது 8.3 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹெட் (56) விக்கெட்டை துஷான் ஹேமந்தா கைப்பற்றினார். பின்னர் 9வது ஓவரில் Cameron Green (3) விக்கெட்டை துனித் வெல்லலகே வீழ்த்தினார்.இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியின் ரன் ஓட்டம் குறைந்து, இடைக்கிடையே விக்கெட்டுகள் சரிந்தன. இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் நடுப்பகுதியில் கட்டுப்பாட்டுடன் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை குறைந்த இலக்குக்குள் கட்டுப்படுத்தினர்.

மிதமான இலக்கைத் துரத்திய இலங்கை அணி நம்பிக்கையுடன் விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் இலங்கை சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, அடுத்தடுத்த போட்டிகளின் முடிவுகள் சாதகமாக அமையாவிட்டால் லீக் சுற்றிலேயே வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் இந்த வெற்றி, உலகக் கோப்பை அரங்கில் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.