பளை மக்களின் நீண்டகாலத் தேவை பூர்த்தி: நவீன ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு!

107

பச்சிலைப்பள்ளி பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவை பூர்த்தி: நவீன ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு..!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ், பளை நகரில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

​இந்நிகழ்வின் முதன்மை அதிதியாகக் கலந்து சிறப்பித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆயுர்வேத வைத்தியசாலையை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.

​பளை பிரதேசத்தில் அமைந்துள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தினால் வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்ட சமூக வலுவூட்டல் நன்கொடை நிதி 17 மில்லியன் ரூபாய் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்ட 12 மில்லியன் ரூபாய் என மொத்தம் 29 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

​பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியன் சுரேன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், உள்ளூராட்சி ஆணையாளர் திரு. எஸ். சுதர்சன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. ப. சத்தியராகவன், புனித அந்திரேயா ஆலயக் குரு முதல்வர் அருட்பணி கி. வரதராஜன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் திரு. இ. த. ஜெயசீலன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.