தொப்பையைக் குறைக்க நிபுணர் தரும் ‘மேஜிக்’ பொடி: 4 பொருட்கள், வியக்கத்தக்க பலன்கள்!

165

தற்போதைய உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களாலும் மக்கள் உடல் பருமன், பானை போன்ற தொப்பையால் சிரமப்படுகிறார்கள். இப்பிரச்சனை இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இந்த உடல் பருமனை ஒருவர் குறைக்காவிட்டால், பின் அது பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கும், உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் நோய்களின் அபாயத்தையும் அதிகரித்துவிடும்.

இப்படி அதிகரித்த உடல் எடையை யாராலும் ஒரே நாளில் குறைத்துவிட முடியாது. அதற்கு தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும். இது தவிர உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஒருசில பானங்களையும் தினசரி உணவில் சேர்த்து வந்தால், இன்னும் சிறப்பான பலனை விரைவில் காணலாம்.நீங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அதுவும் தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா? ஊட்டச்சத்து நிபுணரான ரமிதா கவுர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் எடையைக் குறைக்க உதவும் 4 பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு அற்புதமான எடை இழப்பு பவுடர் குறித்து கொடுத்துள்ளார். அந்த பவுடரை தினமும் உட்கொண்டு வந்தால், தட்டையான வயிற்றைப் பெறலாம்.

தேவையான பொருட்கள்

  • ஆளி விதை – 1 டீஸ்பூன்
  • பட்டை – 1 துண்டு
  • வெந்தயம் – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை
இந்த பொடியை தயாரிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆளி விதை, சீரகம், வெந்தயம் மற்றும் பட்டை போன்றவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

எப்படி உட்கொள்ள வேண்டும்? “எடை இழப்புக்கு இந்த பொடியை 1 டீஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர், பால், தயிர் அல்லது ஸ்மூத்தியுடன் சேர்த்து உட்கொள்ளலாம். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்” என்று ஊட்டச்சத்து நிபுணர் கூறியிருந்தார்.

பிற நன்மைகள்
இந்த எடை இழப்பு பொடியை உட்கொள்வதால் உடல் எடை குறைவது மட்டுமின்றி, பிற நன்மைகளும் கிடைக்குமாம். அந்த நன்மைகளாவன:

  • இரத்த சர்க்கரை அளவு சமநிலையில் இருக்கும்.
  • உடலினுள் ஏற்பட்ட அழற்சி குறையும்.
  • இதய ஆரோக்கியம் மேம்படும்.
  • உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.
  • செரிமானம் சிறப்பாக இருக்கும்.
  • அதிகப்படியான பசியுணர்வு கட்டுப்படும் என்றும் ஊட்டச்சத்து நிபுணர் கூறினார்.

“ஒருவரது தொப்பை மற்றும் உடல் பருமனை ஒரே ஒரு மருந்தோ அல்லது ஒரே ஒரு உணவோ சரிசெய்துவிடாது. அத்துடன் ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உட்கொள்வதோடு, போதுமான அளவு நீரை குடிக்க வேண்டும். அதோடு, தினமும் 40-45 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியை செய்தாலும், மன அழுத்தத்தை நிர்வகிக்க யோகா, தியானம் போன்றவற்றிலும் தவறாமல் ஈடுபட வேண்டும்” என்றும் ஊட்டச்சத்து நிபுணர் கூறியிருந்தார்.