அக்குரேகொட இரட்டைக் கொலை: 10 விசேட குழுக்கள் தீவிர வேட்டை!

170

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றவாளிகளை விரைவாக கைது செய்வதற்காக 10 விசேட விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை மாஅதிபரின் நேரடி ஆலோசனையின் பேரில் இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த விசாரணைகளில் CID,CCD,STF உள்ளிட்ட பிரிவுகள் இணைந்து செயல்படுகின்றன.

கொலையாளிகளை அடையாளம் காணுதல், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தல், சந்தேகநபர்களை விசாரணைக்கு உட்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.