செட்டிகுளம் – முதலியார்குளத்தில் இருந்து திருக்கேதிச்சரம் சென்ற குழுவினர் – செய்த பாராட்டத் தக்க செயல்!

418

செட்டிகுளம் முதலியார்குளம் கிராமத்தில் இருந்து சென்ற மக்களால் திருக்கேதிச்சரம் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான பணி.

மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தில், முதலியார்குளம் வேல்முருகன் ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதான பணி 08.02.2026 செவ்வாய் அன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

செட்டிகுளம் முதலியார்குளத்திலிருந்து திரளான அடியவர்கள் மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்துக்குச் சென்று, ஆலய வளாக சுத்தம், நடைபாதை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிரமதான பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.

எதிர்வரும் மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் பராமரிப்பு பணிகளில், இவ் அடியவர்களின் பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்க வகையில் அமைந்தது.

மேலும், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினரும் பசுமை ஆர்வலருமான க.உதயநாதன் அவர்களின் ஏற்பாட்டில், ஆலய வளாகத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

இந்த சிரமதான நடவடிக்கை, ஆன்மீக உணர்வையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது.