பொது அவசரகால நிலை தீர்மனம் நிறைவேறியது; கஜேந்திரகுமார் அடக்கலநாதன் மாத்திரம் எதிர்ப்பு!

128

பொது அவசரகால நிலை – பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தும் தீர்மானம் நேற்று (06) பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 104 மேலதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பில் ஆதரவாக: 106 வாக்குகள் எதிராக: 2 வாக்குகள் என பதிவாகியுள்ளது.

பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தும் தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பை, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில், பெரும்பான்மையான உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில்,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய இரு உறுப்பினர்கள் மட்டுமே அதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.