பாலம்பிட்டி வீதியோரம் உயிருக்கு போராடும் காட்டு யானை.!

158

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலம்பிட்டி பிரதான வீதிக்கு அருகில் காட்டு யானை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (6) காலை முதல் உயிருக்கு போராடி வருகிறதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

குறித்த யானை எழும்பி நடக்க முடியாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. யானையின் நிலையை கண்ட அப்பகுதி மக்கள் பொலிஸ் மற்றும் வனவள திணைக்கள அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

நேற்றைய தினம் வியாழக்கிழமை (5) இரவு குறித்த பகுதிக்கு யானைக் கூட்டம் வருகை தந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.