சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் 18 தொழிலாளர்கள் பலி.!!

119

இந்தியாவின் தென்கிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள ஒரு சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. கிழக்கு மேகாலயாவின் ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 18 சுரங்கத் தொழிலாளர்களில் 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மேகாலயா காவல் அதிகாரி விகாஸ் குமார் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். மீட்புப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மீட்புப் பணிகளுக்காக மாநிலத்தின் அவசரகால பேரிடர் மீட்புப் படையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்தக் குழுக்கள் இன்னும் சுரங்க இடத்தை அடையவில்லை என தெரிவித்துள்ளனர். இதன்படி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.