மீன்பிடிக்க சென்ற கடற்றொழிலாளி மாயம்.!

178

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறை கடற்றொழிலாளர்களின் விசைப்படகில் இருந்து காரநகர் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற கடற்றொழிலாளி ஒருவர் காணாமல் போய் உள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போன கடற்றொழிலாளி ஊர்காவல்துறை பருத்தி அடைப்பு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய கந்தராசா துஷாகரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இவர்கள் மீன்பிடிக்க சென்ற பொழுது பின் அணியத்திலிருந்து கடற்றொழிலாளி கடலில் தவறி விழுந்து உள்ளதாக கூறப்படுகிறது. காணாமல் போன கடற்றொழிலாளியை தேடும்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.