இளைஞனின் ஆசன வாய்க்குள் பீரங்கி குண்டு; அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

170

பிரான்சின், துலூஸ் (Toulouse) நகரில் 24 வயது இளைஞர் ஒருவரின் ஆசன வாய்க்குள் சுமார் 8 அங்குல நீளம் கொண்ட பீரங்கி குண்டு (Artillery shell) கண்டுபிடிக்கப்பட்டமை அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த பீரங்கி குண்டு முதலாம் உலகப்போர் காலத்து குண்டு (Artillery shell) என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் நோயாளிகளையும் ஊழியர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

1918-ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த வெடிகுண்டு வெடிக்காத நிலையில் இருந்ததால், வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அதனை செயலிழக்கச் செய்யப்பட்டது.

மேலும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அந்த இளைஞர் தற்போது குணமடைந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.