நடுவீதியில் தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி – பொலிஸார் தீவிர விசாரணை.!

135

பதுளையில் இருந்து நெலுவை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று திடீரென தீ பிடித்து முற்றாக எரிந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை முற்பகல் சென் ஜேம்ஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தீயில் எவருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. முச்சக்கர வண்டி தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டாம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.