காவல் நிலையத்திலிருந்து துப்பாக்கி வெளியேறியதா? – விசாரணை தீவிரம்

107

மாத்துகம காவல் நிலையத்தில் துப்பாக்கி மாயம்.

மாத்துகம காவல் நிலையத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து ஒரு சேவைத் துப்பாக்கி மற்றும் 10 ரவைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில், ஒரு காவல் ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கமான ஆய்வின் போது இந்த குறைபாடு கண்டறியப்பட்டதுடன், ஆயுத பாதுகாப்பு நடைமுறைகளில் ஏற்பட்ட தவறுகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒரு காவல் நிலையத்திலேயே ஆயுதம் கழவாடப்பட்டதெனில், பொதுமக்கள் பாதுகாப்பு யாரிடம் என பொதுமக்கள் மத்தியில் கேள்வியெழுந்துள்ளது.