வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: ஒரு மில்லியன் ரூபாயை அபகரித்த பெண்.!

95

பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பாரிய நிதி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பகுதியைச் சேர்ந்த 45 வயதான பெண், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்து 01 மில்லியன் ரூபாயினை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மாத்தறை பிரிவின் அதிகாரிகள், குறித்த நபரை திக்வெல்ல – வெஹெல்ல பகுதியில் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.