செட்டிகுளம்-முகத்தான்குளம் விக்னேஸ்வரா வித்தியாலய கால்கோள் விழா!

223

செட்டிக்குளம், முகத்தான்குளம் ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரா வித்யாலயத்தின் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைக்கும் கால்கோல் விழா, முகத்தான்குளம் ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரா வித்தியாலையத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தரம் ஒன்றில் புதிதாக இணையும் மாணவர்கள் மங்கல வாத்தியங்கள் முழங்க விழா வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டு, அன்புடன் வரவேற்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றதுடன், மாணவர்களின் கற்றல் பயணத்தை தொடங்கும் இந்த முக்கிய நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர் அனைவரும் மகிழ்வுடன் இணைந்து கொண்டு புதியமாணவர்களின் கற்றல் செயற்பாட்டை வாழ்த்தி ஆரம்பித்தனர்.