செட்டிக்குளம் – முகத்தான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கால்கோள் விழா.

291

செட்டிக்குளம் – முகத்தான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கால்கோள் விழா.

செட்டிக்குளம் முகத்தான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றுக்கான மாணவர்களை இணைக்கும் நிகழ்வு 29.01.2026 அதாவது நேற்று சிறப்பாக நடைபெற்றது.

பாண்டு வாத்தியங்கள் முழங்கிட அழைத்துவரப்பட்ட புதிய மாணவர்கள் மகிழ்ச்சியாக கற்றல் செயற்பாடுகளில் இணைந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், கல்வி அதிகாரிகள்,பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

புதிய கல்வி ஆண்டில் மாணவர்களை வரவேற்கும் நோக்கில் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வு மகிழ்ச்சியான சூழலில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.