4 கிலோ கொகைன் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்.!!

176

கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட பொல்லதே பகுதியில் சுமார் 22 கோடி ரூபாய் மதிப்புள்ள கொகைன் மற்றும் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் இன்று (29) காலை மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது 04 கிலோகிராம் கொகைன் மற்றும் 3450 போதை மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொல்லதே பகுதியில் வசிக்கும் 48 வயதுடைய பெண் ஆவார். சம்பவம் குறித்து மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.