திருக்கேதீஸ்வரம் மகா சிவராத்திரி விழா தொகடர்பில் அதிகாரிகள் தீர்மாணம்!

200

திருக்கேதீஸ்வரம் மகா சிவராத்திரி விழா: ஆரம்பகட்ட ஏற்பாடுகள் தீவிரம்.

வரலாற்றுப் புகழ்பெற்ற பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி பெருவிழாவிற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனை முன்னிட்டு, இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27, 2026) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பக்தர்களின் பாதுகாப்பு,போக்குவரத்து ஒழுங்கமைப்பு, சுகாதார வசதிகள், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு, தேவையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

மகா சிவராத்திரி விழாவை சீராகவும் பாதுகாப்பாகவும் நடத்த அனைத்து துறைகளும் இணைந்து செயற்பட வேண்டும் என அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.