ஜனாதிபதி செயலகம் முன் இரண்டாவது நாளாக தொடரும் உண்ணாவிரம்.

127

இரண்டாவது நாளாக சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ள பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ளோரின் உடல்நிலை மோசமடைந்து செல்கிறது. பெண்ணொருவர் சற்றுமுன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்று (27) அவர்கள் “நீதியின் மரணம்” எனக் குறிப்பிட்டு சவப்பெட்டியொன்றை எரித்ததுடன், அதனை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் அறிவித்தனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினால் நடைபாதை தடைப்படுவதாக பொலிஸார் தெரிவித்ததையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.

7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள தங்களை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று (26) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.

எவ்வாறாயினும், அதற்கு முறையான பதில் கிடைக்காத காரணத்தினால் போராட்டக் குழுவின் நான்கு உறுப்பினர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

 

இறந்தாலும் இவ்விடத்திலே இறப்போம் என தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள் குறித்த உண்ணாவிரதத்தை முன்னெடுப்போர்இரண்டாவது நாளாக சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ள பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்.

சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ளோரின் உடல்நிலை மோசமடைந்து செல்கிறது. பெண்ணொருவர் சற்றுமுன் வைத்தியசாலையில் அனுமதி…