“தூயகரம் தூயநகரம்” திட்டத்தில் தூய்மைப்படுத்தப்பட்டது யாழ் புல்லுக்குளம்!

141

யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட புல்லுக்குளத்தில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகள் “தூயகரங்கள் தூயநகரம்” திட்டத்தினூடாக சமூக ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாண முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், தமிழ்மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தருமான திரு. வரதராஜன் பார்த்திவன் அவர்களின் முன்னெடுப்பில் “தூய கரங்கள் – தூய நகரம்” என்ற செயல்திட்டத்தின் கீழ் பல செயற்பாட்டாளர்களின் பங்குபற்றுதலுடன் இச்சிரமதானப் பணி நேற்று நடைபெற்றது.

இப்பணியில் இளைஞர்கள் மட்டுமின்றி, பல சமூக ஆர்வலர்களும் இணைந்து செயற்பட்டனர். அனைவரின் கூட்டு முயற்சியால் புல்லுக்குளம் பகுதி வெற்றிகரமாக தூய்மைப்படுத்தப்பட்டது. இந்த செயற்பாடனது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான ஒரு சிறந்த முன்னுதாரணமாகவம் அமைந்தது.

கடந்த மாநகர சபைத்தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனு தேர்தல் திணைக்களத்தால் நிரகரிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.