இது உண்மையின் மீதான நம்பிக்கையின் தொடக்கம்!

194

ஆசிரியர் குறிப்பு

அனைத்து உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வருடம் அனைவர் வாழ்விலும் மககழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொண்டுவருவதாக தொடங்கட்டும்.

இந்த நாள் ஒரு செய்தி ஊடகத்தின் தொடக்கம் மட்டும் அல்ல.
இது உண்மையின் மீதான நம்பிக்கையின் தொடக்கம்.


தகவல்கள் வேகமாக பரவும் இந்த காலத்தில் உண்மையும் பொய்யும் ஒரே வேகத்தில் பயணிக்கின்றன.
அதனால் உண்மைக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டிய காலமிது.
அந்த அவசியத்திலிருந்தே
The Bronze Voice Thekural.com உருவாகிறது.
எந்த அழுத்தமுமில்லாது,
அதிகாரங்களுக்கு அஞ்சாத,
மக்களின் குரலாக ஒலிக்கும்
ஒரு சுயாதீன செய்திக் குரல் — இதுவே எங்கள் நோக்கம்.


தமிழ் பேசும் உலகமெங்கும்,
ஒடுக்கப்பட்டவர்களின் குரல்,
மறைக்கப்படும் செய்திகள்,
புறக்கணிக்கப்படும் உண்மைகள்
இனி மௌனமாக இருக்கக் கூடாது.
The Bronze Voice – Thekural.com
ஒரு செய்தி தளம் மட்டுமல்ல.
இது ஒரு பொறுப்பு.
இது ஒரு உறுதி.
அரசியல், சமூகநீதி, மனித உரிமைகள்,
தமிழின வரலாறு,
இன்றைய நிகழ்வுகள் —
எதிலும் உண்மையின் பக்கம் நின்றே நாம் பயணிப்போம்.

இந்த பயணத்தில்
நீங்கள் வாசகர்கள் அல்ல
நீங்கள் எங்களுடன் பயணிக்கும்
சாட்சிகளும் துணை நிலையாளர்களுமாக இணைகிறீர்கள்.

உண்மைக்கு முதலிடம்.
அச்சமில்லா செய்தியியல்.
அர்ப்பணிப்புடன்

The Bronze Voice – Thekural.com.
ஆசிரியர்