மின்சாரம் தாக்கி பலியான நபர் ; தீவிரமடையும் விசாரணை.!

119

சீதுவ தம்பல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கி இறந்த நபரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் நீர்கொழும்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையில், கல்னேவ நகரில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கல்னேவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நபரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் உடல் அனுராதபுரம் மருத்துவமனை பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளது.